Select Ur Mother Language to Translate

Friday, November 25, 2016

யாரும் ஓடவும் வேண்டாம்

அமிர்தம் என்னும் ஆலமரத்திலிருந்து
மலர்ந்த ஜெயக்கொடியிலிருந்து துளிர்த்த
சிறிய விழுது நான்,
நல்ல நிலமும், நல்ல நீரும்
தேடி செல்வது என் இயற்கை,
அவ்வாறே, நல்ல மனிதர்களும்
என தேடிச்செல்கிறேன்.

எவ்விடம் அசுத்தமும், கழிவும் உள்ளதோ,
அவ்விடம் செல்ல மாட்டேன்,
அவ்வாறான மனிதர்களையும் தேடித்தான்
நான் செல்லமாட்டேன்,

நான் யாரையும் துரத்தவுமில்லை,
யாரும் ஓடவும் வேண்டாம்,

எனக்கென்று ஒரு வழியிருக்கின்றது,
எனக்கென்று ஒரு வாழ்க்கையிருக்கின்றது,
அவ்வழியே பயணிக்கிறேன்...

சூரியன், சந்திரன் ஒளி போல,
உண்மையானவர்கள் உள்ள இடந்தனில்
நான் வாழ்கிறேன்
திசைகாட்டி திருத்தியமைக்கு நன்றி,
வாழ்க சகதிகளே!!!...

Saturday, March 3, 2012

ஜெயக்கொடி - என் அப்பா


                 என் தந்தை, என் அப்பா என்பதே மிகச்சரியாக இருக்கும், இதையே நான் பெரிதும் விரும்புகிறேன், என்னை பெற்ற, எனக்கு உயிர் கொடுத்த, எனக்கு இவ்வுலகத்தையும் இவ்வுலகதிற்கு என்னையும் அறிமுகம் செய்த மிகப் பெரியவர் என் அப்பா, ஆமாம், (ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவர்களை பெற்றோர் மிக முக்கியமானவர் ஆவார்கள்) எனக்கு என் அப்பா மிக முக்கியமானவரும் இவ்வுலகத்தில் எனக்கு முதன்மையானவரும் ஆவார். ஆகவே நான் என் அப்பாவைபற்றி முதலில் எழுத இருக்கிறேன்.

        வரலாறுகள் மிகபெரிய மனிதர்களுக்கு மட்டுமின்றி, நம்முடன் வாழ்ந்த நம்மை வாழவைத்த மனிதர்களுக்கும் உண்டு, மிகப்பெரிய மனிதர்களுக்கு ஆரம்பகால சிரமங்கள் மட்டுமே, ஆனால் சிலருக்கு வாழ்க்கை முழுதும் சிரமங்களாகவே உள்ளது இருந்திருக்கிறது.
     
         வெகு நாளாய் எனக்குள், என் அப்பாவைப்பற்றி கதையோ திரைப்படமோ எழுத வேண்டும், அல்லது எடுக்கவேண்டும் என்ற எண்ணம் என் அப்பா மறைவிற்குபிறகு என்னுள் இருந்து வருகின்றது. ஆனால் என் கையெழுத்தின் மிக மோசமான நிலை இவ்வளவு கால தாமதத்திற்கு காரணம் நானும் கம்ப்யுட்டரில் டைப் செய்து, எழுதலாம் என்றிருந்தேன். இப்பொழுதுதான் நேரம் கிடைத்திருகிறது. நான் முதலில், இருவருக்கு நன்றி சொல்லகடமைபட்டிருக்கிறேன், அவர்கள் இயக்குனர் சேரன் [சொல்ல மறந்த கதை ],  இயக்குனர் கெளதம்மேனன் [வாரணம் ஆயிரம்], ஆவார்கள். ஏனென்றால் அவர்களது படங்களில் என் அப்பாவை பார்த்தேன், ஆகவே இருவருக்கும் என் நன்றிகள் பல.. 


                   என் தந்தையை நான் நினைக்கும் போது, என் நினைவிற்கு வருபவை வண்ணங்களும், வண்ண கலர் பென்சில்களும், என் நினைவை விட்டு நீங்காது உள்ளன. நான் வண்ணங்களை உபயோகிக்கையில் என் தந்தையின் முகமே என் நினைவலையை நிரப்புகின்றன... நான் என் பால்ய குழந்தை வயதிற்கு செல்கின்றேன்...
என் இளம்பிராயத்தில் என்  அப்பா எனக்கு வாங்கி கொடுத்த வண்ண பென்சில்களும், ஸ்கெட்சும் பெட்டியில் திறந்து பார்த்து எடுத்த ஞாபகங்கள் இன்னும் என் நினைவை விட்டு நீங்காதவையாக உள்ளன... இவற்றுடன் என் தந்தையும் நினைவுகளில்.....